மணிப்பூரில் திடீர் நில நடுக்கம்.. அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்..!

Mahendran

புதன், 5 மார்ச் 2025 (14:17 IST)
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு பிரிவினருக்கிடையில் மோதல் நடந்துவருவதால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மணிப்பூரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் வீடுகளிலிருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்று காலை 11:06 மணிக்கு மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் ரிக்டர் அளவு 5.7 என பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இம்பால் கிழக்கு மாவட்டத்திலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மணிப்பூர் மட்டுமின்றி அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12:20 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் மணிப்பூரில் பல கட்டிடங்கள் விரிசலுடன் காணப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்