உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருளான இ - சிகரெட்டுக்கு தடைவிதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இ - சிகரெட்டுக்கு தடை விதித்து மத்திய அமைச்சர் உத்தரவிட்டார்.
நாடு முழுவதும் இ - சிகரெட்டுக்கு இன்று மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மேலும், இ - சிகரெட் உற்பத்தி ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, அதை விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.