5 மாநில தேர்தலில் பாஜக வெற்றிமுகம் எதிரொலி: பங்குச்சந்தை கிடுகிடு உயர்வு

வியாழன், 10 மார்ச் 2022 (09:26 IST)
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது 
 
இதன் காரணமாக பங்குச்சந்தை இன்று அபாரமாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 1200 புள்ளிகள் உயர்ந்து  55755 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 300 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 16 ஆயிரத்து 670 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றும் இன்றும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நம்பிக்கையுடன் உள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்