மாநாடு படத்தின் வெற்றி… கொரோனா குமார் படத்தை ட்ராப் ஆக்கிடுமோ? தயாரிப்பாளரோடு சிம்புவுக்கு கருத்து வேறுபாடு!

புதன், 9 மார்ச் 2022 (16:51 IST)
சிம்பு நடிப்பில் அடுத்ததாக கோகுல் இயக்கும் கொரோனா குமார் படம் தொடங்கப்பட இருந்தது.

மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை பல மடங்கு விரிவு படுத்தியுள்ளது. அதனால் சிம்புவின் சம்பளமும் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. இந்நிலையியில் சிம்பு தன்னை வைத்து மூன்று படங்கள் தயாரிக்க ஒப்பந்தமான ஐசரி கணேஷுடன் சம்பளத்தை உயர்த்தி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஐசரி கணேஷ் மாநாடுக்கு முன்பாகவே சிம்புவை வைத்து  மூன்று படங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருந்தார்.

அதில் முதல் படமாக சிம்பு ஐசரி கணேஷ் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு உருவாகி வருகிறது. இதற்கடுத்து கொரோனா குமாரை தொடங்க இருந்தனர். ஆனால் சிம்பு ஐசரி கணேஷ் பேசிய பழைய சம்பளத்துக்கு நடிக்க முடியாது என்றும் இப்போதைய சம்பளம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளாராம். அதற்கு ஐசரி கணேஷ் தரப்பில் ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா குமார் திரைப்படம் தொடங்குவது சந்தேகமாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்