உ.பியில் சமாஜ்வாடி.. உத்தரகாண்டில் காங்கிரஸ்! – பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் கட்சிகள்!

வியாழன், 10 மார்ச் 2022 (09:19 IST)
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பல இடங்களில் பாஜகவுக்கு பல கட்சிகள் கடும் போட்டியாக நிலவுகின்றன.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னனியில் இருந்தாலும், அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி பெரும் போட்டியாக நிலவுகிறது. காலை 9 மணி நிலவரப்படி 403 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக 105 இடங்களிலும், சமாஜ்வாதி 87 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதுபோல உத்தரகாண்டில் ஆளும் பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. கோவா, மணிப்பூரில் பாஜக முன்னிலையில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்