அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஜீன்ஸ், குட்டைப்பாவாடை அணியக்கூடாது: அதிரடி உத்தரவு

சனி, 11 பிப்ரவரி 2023 (17:00 IST)
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் நர்சுகள் உட்பட அனைத்து ஊழியர்களும் ஜீன்ஸ் குட்டை பாவாடை உள்ளிட்ட ஆடைகளை அணியக்கூடாது என ஹரியானா மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
ஜீன்ஸ் குட்டை பாவாடை போன்றவை பணி ரீதியிலான ஆடை கிடையாது என்றும் அதேபோல் டீசர்ட் மற்றும் இறுக்கமான பேண்ட் ஆகியவற்றை அனுமதிக்க முடியாது என்றும் ஒழுக்கம் ஒற்றுமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நிலை நிறுத்த உரிய ஆடைகளை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அணிந்து வரவேண்டும் என்றும் அப்போதுதான் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற முடியும் என்றும் ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. 
 
அரசு மருத்துவர்களுக்கான இந்த புதிய ஆடை கட்டுப்பாடு அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் தொழில்நுட்பம் சமையலறை துப்புரவு பணியாளர்கள் ஆகிய துறையில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்றும் அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும் என்றும் தூய்மையான உடை அணிந்து வர வேண்டும் என்றும் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்