ஜனவரி 8ஆம் தேதி விடுமுறை எடுக்கக்கூடாது: தலைமை செயலாளர் உத்தரவால் பரபரப்பு

வெள்ளி, 3 ஜனவரி 2020 (21:20 IST)
ஜனவரி 8ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதி அகில அளவில் பொது வேலை நிறுத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. சென்னை உள்பட தமிழகத்திலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய அளவில் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முழு அளவில் இந்த போராட்டம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து தமிழகத்திலும் இந்த போராட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என  இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டு இருந்த  நிலையில் அரசின் இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்