தமிழகத்தில் மேலும் 58 பேருக்குக் கொரோனா!தமிழக தலைமை செயலாளர் செய்தியாளர் சந்திப்பு !

சனி, 11 ஏப்ரல் 2020 (18:31 IST)
தமிழகத்தில் இன்னும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமரிடம் வற்புறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று நாடெங்கும் குரல்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஒடிசா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதை பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஊரடங்கை நீட்டிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தலைமை செயலர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து மோடி ஊரடங்கு நீட்டிப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 58 பேருக்குக் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 969 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஈரோட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்