ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று தான் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் இருக்கும் என்ற நிலையில், இன்று திடீரென வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எரிவாயுவை குறைந்த விலைக்கு விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை ஈடுசெய்யும் விதமாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் கேஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி கூறியுள்ளார்.
இந்த புதிய விலை நாளை முதல், அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய விலை அறிவிப்பின் மூலம், 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ.803ல் இருந்து ரூ.853ஆக அதிகரிக்கிறது.