இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை

வியாழன், 19 அக்டோபர் 2017 (13:31 IST)
சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை.
 
தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக நாய்கள் கடத்தி செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
 
சமீபத்தில் மிசோரம் மாநிலத்திற்குள் வந்த ஒரு மினி லாரியில் நாய்கள் கடத்தி செல்லப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து சில விலங்கு நல ஆர்வலர்கள், வாட்ஸ்-அப் மூலம், உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார், அதிலிருந்து இறைச்சிக்காக  கொண்டு செல்லப்பட்ட 17 நாய்களை மீட்டனர். 
 
நாய்க்கறி உண்ணும் பழக்கும் இந்தியாவிலும் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்