இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சலுகை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய கட்சி தலைவர்கள் நேற்று வீட்டு சிறையில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இது அம்மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் பல்வேறு கட்சி தலைவர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் தற்போதுவரை காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா,லோக் சபா உறுப்பினரும் முன்னால் முதல்வருமான பரூக் அப்துல்லா ஆகிய தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்று காலையில் எம். தயாநிதிமாறம் லோக்சபா சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.