சிறப்பு அந்தஸ்து திரும்ப கிடைக்குமா? காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் உச்ச நீதிமன்றம்!!
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:56 IST)
ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்த் செய்துள்ளது. அதோடு ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியம் பிரதேசங்களாக பிரித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் இருக்கும் நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு குறித்த விரிவான தகவல் பின்வருமாறு...
வழக்கறிஞர் எம்எல் சர்மா என்பவர் ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 370-ஐ ரத்து செய்து குடியரசுத் தலைவர் வழங்கிய ஒப்புதல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உச்ச நீதிமன்றம் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.