கொரோனா வைரஸ் எதிரொலியால் டிஜிட்டல் பயன்பாடு அதிகரிப்பு

செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (19:55 IST)
கொரோனா வைரஸ் எதிரொலியால் டிஜிட்டல் பயன்பாடு அதிகரிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் 19 நாட்கள் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டிஜிட்டல் பரிவர்த்தனை மிக அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் 33 சதவீதம் பேர் பேடிஎம், 14 சதவீதம் பேர் கூகுள் பே, 10 சதவீதம் பேர் அமேசான் பே, 6 சதவீதம் பேர் பிஎச் ஐஎம், 4 சதவீதம் பேர் போன் பே மூலம் பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது
 
ஏ.எடி.எம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதை குறைக்க டிஜிட்டல் கட்டண முறைகளை பயன்படுத்துமாறு என்.பி.சி.ஐ., வலியுறுத்தி வரும் நிலையில் வேறு வழியில்லாததால் மக்கள் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர்.
 
தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் ஆகியவை உள்பட பல பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மூலம் நடைபெறுகிறது என்றும் டிஜிட்டலில் பணப்பரிமாற்றம் செய்பவர்களில் 54 சதவீதம் பேர் விசா கார்டுகளையும், 30 சதவீதம் பேர் மாஸ்டர் கார்டுகளையும், 12 சதவீதம் பேர் ரூபே கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்