எண்ணி 6 வருடங்களில் வங்கிகள் இருக்காது: டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம்!!
சனி, 10 ஜூன் 2017 (12:09 IST)
நாட்டில் அடுத்த 6 ஆண்டுகளில் பெரும்பாலான வங்கிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் தலைமை செயலதிகாரியான அமிதாப் கண்ட் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படும். இதனால், எதிர்காலத்தில் வங்கிகளை இயக்க, வேண்டிய செலவுகளை ஈடுகட்டுவது பெரும் சுமையாக மாறும் என தெரிவித்துள்ளார்.
மொபைல் மற்றும் இணையம் மூலமாக பணப்பரிமாற்றம் நடப்பதால் வங்கிகள் டிஜிட்டல் வளர்ச்சியில் நோக்கி செல்கின்றன. அனைத்து டிஜிட்டல் என்ற பட்சத்தில் நேரடி வங்கிகளின் தேவை குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களில் மட்டும் 21 பேமெண்ட் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.