ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கிலியை சேர்ந்த விவசாயி ஒருவர் சில நாட்கள் முன்னதாக தனது நிலத்தை உழுது கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது நிலத்தில் ஒரு கல் மின்னி பிரகாசித்துள்ளது. அதை எடுத்து சென்று நகை வியாபாரி ஒருவரிடம் விசாரித்தபோது அது வைரக்கல் என்றும், ரூ.2 லட்சம் பெருமானம் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி அந்த கிராம மக்களிடம் தீயாக பரவியுள்ளது. இதனால் மேலும் சில விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது பார்த்தபோது அவர்களுக்கும் சில வைர கற்கள் கிடைத்துள்ளன. இதனால் கிராமமே சுற்றியுள்ள நிலப்பகுதிகளை போட்டி போட்டு உழுது வைரத்தை தேடி வருகிறார்களாம். இந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.