டெல்டா வைரஸ் தடுப்பூசி போட்டாலும் தாக்கும் : ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி!!

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (13:33 IST)
உருமாறிய டெல்டா வகை வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போது இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கும்போது மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது. 
 
மூன்றாவது அலையில் டெல்டா வைரஸ் என்ற வீரியமிக்க வைரஸ் பரவி வருவதாகவும் இந்தியாவில் ஏற்கனவே இந்த வைரஸ் பரவி பலரை பாதித்து உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என்ற தகவல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஆம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சென்னையில் ஆய்வு ஒன்றிய நடத்தியது. 
 
அதில், தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் டெல்டா வகை வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் டெல்டா வைரஸ் தாக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்