வீடுகளுக்கே சென்று மதுபானம் விநியோகம்... பிரபல நிறுவனங்களுக்கு போட்டியாக Amazon !

சனி, 20 ஜூன் 2020 (22:40 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் வாடிக்கையாளர்களின்  வீடுகளுக்கே சென்று மதுபானம் விநியோகம் செய்வதற்கு  அமேசான்  நிறுவனம் தகுதி பெற்றுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் அம்மாநிலத்தில் உரிமம் பெற்ற மதுபானக்  கடைகளில் இருந்து மதுபானம் பெற்று வீடுகளுக்கே சென்றூ விற்பது குறித்து தகுதியான நிறுவனங்கள் அனுமதி பெற விருப்பம் தெரிவிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமேசன் , பிக் பாஸ்கர் ஆகிய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்னமே ஸ்வீக்கி, சொமோட்டோ ஆகிய நிறுவனங்கள்  வீடுகளுக்கு சென்று மதுபானம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்