டெல்லி மசூதியில் நடந்த கூட்டத்தில் 200 பேருக்கு கொரோனா! – தேடுதல் பணி தீவிரம்!

செவ்வாய், 31 மார்ச் 2020 (11:07 IST)
டெல்லியில் மசூதியில் கூடியவர்களில் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் 32 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி டெல்லி நிஜாமுதின் பகுதி மசூடி ஒன்றில் இஸ்லாமிய மத குருக்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அந்த சந்திப்புக்கு இந்தியா முழுவதும் உள்ள பல மசூதிகளிம் குருக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா மட்டுமல்லாது தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் கலந்துகொண்டுள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் வரை அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய காஷ்மீர் இஸ்லாமிய குரு ஒருவர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார். கூட்டம் முடிந்த பிறகும் மசூதிகளில் தங்கியிருந்தவர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் பலருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த கூட்டத்தை நடத்திய இஸ்லாமிய அமைப்பு மற்றும் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பதற்றம் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்