5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

சனி, 8 அக்டோபர் 2022 (12:17 IST)
இதுவரை 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இறுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இறுதித்தேர்வில் தோல்வி அடைந்தால் அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு மீண்டும் தேர்ச்சி அடைய ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒப்புக்கொண்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால் அடுத்த வகுப்புக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளார்
 
மேலும் 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுதேர்வு மூலம் தேர்ச்சி அடைய இரண்டு மாதங்களுக்குள் அந்த மாணவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்துள்ளது
 
எனவே இதுவரை 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி அடையாவிட்டாலும் அடுத்த வகுப்புக்கு செல்லும் நடைமுறை இனி கிடையாது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முற்றுபுள்ளி
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்