இன்று கிருஷ்ண ஜெயந்தி.. இஸ்கான் கோவிலில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வழிபாடு!

Mahendran

சனி, 16 ஆகஸ்ட் 2025 (21:59 IST)
கிருஷ்ண ஜெயந்தி  விழாவை முன்னிட்டு, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, கிழக்கு கைலாஷில் உள்ள இஸ்கான்  கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இந்த விழா, நாடு முழுவதும் கிருஷ்ண பகவானின் பிறந்த தினமாகப் பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

வழிபாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேகா குப்தா, அனைத்து பக்தர்களுக்கும் கிருஷ்ணரின் அருள் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தினார். 

அவர் கூறியதாவது: "கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதம் அனைத்து பக்தர்களுக்கும் எப்போதும் கிடைக்கட்டும். இன்று ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொருவரும் கிருஷ்ணரை வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீ கிருஷ்ண ஜனமாஷ்டமி திருநாளில் அனைத்து டெல்லி மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்