கெஜ்ரிவாலின் 5T ப்ளான்: கொரோனாவை எதிர்க்க கைக்கொடுக்குமா??

புதன், 8 ஏப்ரல் 2020 (13:19 IST)
கொரோனாவுடன் போராட டெல்லி அரசு ஐந்து அம்சத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும், பலியும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,789 ஆக இருந்த நிலையில் தற்போது 5,194 ஆக உயர்ந்துள்ளது. 124 ஆக இருந்த பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமானவர்கள் எண்ணிக்கை 353 லிருந்து 402 ஆக உயர்ந்துள்ளது.
 
ஊரடங்கு காலம் ஏப்ரல் 14ல் முடிவதாக உள்ள நிலையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில் டெல்லியில் தற்போது 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுடன் போராட டெல்லி அரசு ஐந்து அம்சத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.
 
அதாவது, Testing, Tracing, Treatment, Teamwork, Tracking & Monitoring என்ற 5T திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் இவர்களுக்கு கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்