எந்த ஒரு குழந்தையும் பிறந்த சில மாதங்கள் கழித்தே, தவழ ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தே நடக்க ஆரம்பிக்கும். ஆனால் டெல்லியில் நேற்று பிறந்த ஒரு குழந்தை பிறந்த ஒருசில மணி நேரங்களிலேயே நர்ஸ் உதவியால் நடக்க ஆரம்பித்த அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு குழந்தை சற்று அதிசயமாக, பிறந்து சில மணிநேரத்திலேயே, நர்ஸின் உதவியோடு, நடக்கப் பழகும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.