ரஷ்யாவில் இந்திய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் வருகை: பேச்சுவார்த்தை நடக்குமா?

வியாழன், 3 செப்டம்பர் 2020 (07:44 IST)
ரஷ்யாவில் இந்திய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் வருகை:
கடந்த சில மாதங்களாக இந்திய மற்றும் சீன நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருவதும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் அவ்வப்போது மோதிக் கொள்வதும் ஆன சம்பவங்கள் நடந்து வருகின்றன 
 
கடந்த ஜூன் மாதம் லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதியதில் இரு தரப்பிற்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அதிரடியாக சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்கள் சென்றுள்ளனர். நேற்று மாலை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் ரஷ்யா சென்றடைந்தார். அவருக்கு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் 
 
அதேபோல் சீன பாதுகாப்பு அமைச்சரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ளார். இருப்பினும் இந்திய மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை எதுவும் நடத்த மாட்டார்கள் என்றும் இருவருக்கும் இடையே சந்திப்பு கூட நடக்காது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் ரஷ்யாவில் நடைபெறும் உலகப் போரின் 70ம் ஆண்டு வெற்றி விழாவிலும் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் இந்த நிகழ்விலும் இருவரும் சந்தித்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே அதிகாரிகள் மட்டத்திலும் ராணுவம் மட்டத்திலும் இந்திய சீன நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் சீன ராணுவம் இந்தியாவில் ஊடுருவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்