தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த இரு குழந்தைகள் அருகே நின்றிருந்த காருக்குள் சென்று விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் கதவைத்திறக்க முடியவில்லை இதனால் இருகுழந்தைகளும் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்திலுள்ள நிசாமாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ரியாஸ் (10). மெஹ்மத் (5) ஆகிய குழந்தைகள் விளயாடிக்கொண்டிருந்த போது, வெளியில் ஒரு கார் நின்றிருந்தது. அதன் உள்ளே சென்று விளையாடிய இரு குழந்தைகளும் கதவை அடைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் அந்த காரின் உரிமையாளர் தன் காரின் கதவைத் திறந்த போது, இரு குழந்தைகளும், மயங்கி இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர் இருகுழந்தைகளின் உடலையும் உடற்கூறி ஆய்வுக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.