தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி ! பகீர் சம்பவம்

செவ்வாய், 16 ஜூலை 2019 (16:10 IST)
திருப்பதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவரை, ஒரு கரடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் விஜயலட்சுமி. இவர் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை இறந்துவிட்டார். இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் நான்குபேரையும் தாயார் சரிவர கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
 
இந்நிலையில்  விஜயலட்சுமி, ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்க்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளதாகத் தெரிகிறது. பின்னர் வீட்டிலிருந்து வெளியேறினார். 
 
இதனையடுத்து திருமலைக்கு  வந்த அவர் பல இடங்களில் சுற்றித் அலைந்தார். விஜயலட்சுமியிடம் இருந்த பணம் தீர்ந்துவிட்டதால் அவர் திருமலையில் உள்ள கோகர்பம் நீர்த்தேக்கம் அருகில் மடங்களுக்கு பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்று தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தார்.
 
அப்போது அங்கிருந்த கரடி ஒன்று நின்றிருந்ததை அவர் பார்க்கவில்லை. அதன் உறுமல் சப்தத்தை கேட்டு விஜயலட்சுமி அலறியுள்ளார். அதன் மீது கற்களை வீசியுள்ளார். அதனால் கோபம் அடைந்த கரடி அவரை தாக்க வந்துள்ளது. அவரை விரட்டி ஓடி வந்த கரடி அவரை தாக்கியது. 
 
இதில் சப்தமிட்டு கத்தினார். அவரது  அலறல் சப்தத்தைக் கேட்டு, ஓடி வந்த வனத்துறையில் கரடியால் தாக்கப்பட்ட விஜயலட்சுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்