அதிதீவிர புயலாக உருமாறிய பைபர்ஜாய் புயல்... வானிலை மையம் எச்சரிக்கை

திங்கள், 12 ஜூன் 2023 (20:33 IST)
அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பைபர்ஜாய்  புயல் குஜராத்தின் செளராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செளராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் வரும் ஜூன் 15 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பைபர்ஜாய்  புயல் தீவிர நிலையில் அதி தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எனவே இந்த புயல் தெற்கு, தென்மேற்கு குஜராத் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை மையமாகக் கொண்டு கனமழை கொட்டித் தீர்க்கும் என்று கூறியுள்ளது.

மேலும், அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பைபர்ஜாய்  புயல் குஜராத்தின் செளராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செளராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் வரும் ஜூன் 15 வரை மீன்வர்கள் கடலுலக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 15 ஆம் தேதி இந்தப் புயல் செளராஷ்டிரா மற்றும் கட்ச் வழியாக கரையைக் கடந்து, பாகிஸ்தான் கராச்சி நோக்கி நகரும் சென்றும்,  அந்த நேரத்தில் காற்றின் 125 – 135ல் இருந்து 150வரை செல்லக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்