நிசர்கா ஆபத்தானதா.. வானிலை மையம் கூறுவது என்ன?

செவ்வாய், 2 ஜூன் 2020 (09:48 IST)
நிசர்கா புயல் உருவாகினால் அது நாளை கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த புயல் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது, அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாம். 
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால்,  நிசர்கா என்று அழைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மேலும் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலையால் லட்சதீவு, கடலோர கர்நாடக மற்றும் கோவா பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புயலாக மாறினால் வடக்கு மகராஷ்டிரா தெற்கு குஜராத் இடையே நாளை கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
புயல் கடக்கும் போது 95 - 105 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்., கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்