பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்டது கண்டுபிடிப்பு! – சைபர் க்ரைம் நிபுணர்கள் அறிக்கை!

திங்கள், 31 ஜனவரி 2022 (09:58 IST)
இந்திய அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது உண்மை என சைபர் க்ரைம் நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நிறுவனத்தின் உளவு தொழில்நுட்ப மென்பொருளான பெகாசஸ் மூலமாக இந்திய அரசு அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களை ஒட்டுகேட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் விசாரணை குழுவை அமைத்தது.

இந்நிலையில் புகார் தெரிவித்த மனுதாரர்களின் 7 ஐபோன்கள், 6 ஆண்ட்ராய்டு போன்களை 2 வெவ்வேறு சைபர் க்ரைம் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் அந்த செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது உண்மை என நிபுணர்கள் குழு விசாரணை குழுவிற்கு அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்