ரூ.50 கோடிக்கு போலி நாணயங்கள்: பலே ஆசாமிகள் கைது!!

வெள்ளி, 7 ஜூலை 2017 (16:03 IST)
ரூ.50 கோடி அளவிற்கு போலி நாணங்களை அச்சிட்டதற்கு உப்கர் மற்றும் ஸ்வேக்கர் லூத்ரா என்ற இருவரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.


 
 
போலி நாணயங்களை தயாரிக்க ஹைட்ராலிக் இயந்திரம், அரைக்கும் இயந்திரம், லேத்து இயந்திரம் மற்றும் மேற்பரப்பு சாணை என பல இந்திரங்களை வாங்கி வீட்டைத் தொழிற்சாலையாக மாற்றியுள்ளனர்.
 
மெட்டல் ஷீட்கள் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்திப் போலி நாணயங்களைத் தயார் செய்துள்ளனர். இந்நிலையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு நேபாள எல்லையில் இந்த போலி ஆசாமிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
அங்கு நடத்திய சோதனையில் பல போலி 5 மற்றும் 10 ரூபய் நாணயங்கள் கைப்பற்றபட்டுள்ளது. போலியாக ஒரு 10 ரூபாய் நாணயம் செய்ய 4.5 ரூபாயும், 5 ரூபாய் நாணயம் செய்ய 2 ரூபாயும் செலவாகும் என போலி ஆசாமிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், போலியாக நாணயங்களை வார சந்தை, சிறு வணிகர்கள், நெடுஞ்சாலை டோல்கள் என டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்