மும்பையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய முதலை ஒன்று தண்டவாளத்தில் இருந்தது. இந்த முதலையை பார்த்த அந்த வழியாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனை அடுத்து முதலையை காப்பாற்றுவதற்காக ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் முயற்சித்தனர். வனவிலங்கு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது