இணையத்தில் வைரலாகும் சுந்தர் பிச்சை பகிர்ந்த வீடியோ!

வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (20:36 IST)
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
 
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீரோடை ஒன்றில் முதலை இருப்பதை பார்த்து, டிரோன் கேமரா மூலம் அதனை வீடியோ எடுக்க முயன்றனர் 
 
ட்ரோன் கேமரா முதலையின் அருகில் சென்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென முதலை அந்த ட்ரோன் கேமிராவை கவ்வியது. இதனை அடுத்து முதலையின் வாயில் இருந்து குபுகுபுவென புகை வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த வீடியோ யூ டியூபில் வைரல் ஆன நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்