அப்போது அவருக்கு நீதிமன்றத்தில் பேச சில நிமிடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத் துறை அழிக்கப் பார்க்கிறது என்றும், எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என சொல்லவில்லை என்றும், ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்டதில் ஒரு ரூபாய் கூட மீட்கவில்லை என்றும் வாதாடினார்.
இந்த வழக்கில் 4 சாட்சிகள் மட்டுமே இருக்கும் நிலையில் பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய 4 சாட்சிகள் போதுமானதா? என்றும் கேள்வி எழுப்பினர். அவருடைய இந்த வாதங்களுக்கு பின் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.