இந்நிலையில் அச்சடிக்கப்பட்டும் ஒரு 2000 ரூ நோட்டின் தயாரிப்புச் செலவு எவ்வளவு என்பது குறித்த விவரத்தை மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார். அதில் 2000 ரூ நோட்டுகளை அச்சடிக்க 2017-18 நிதியாண்டில் ரூ.4.18 ஆக நிர்ணயிக்கப்பட 2018-19 நிதியாண்டில் இதன் விலை ரூ.3.53 ஆகக் குறைந்துள்ளது. அதேப்போல 200 ரூபாய் நோட்டு ஒன்றுக்கு ரூ.2.24 இருந்த விலை 2018-19ஆம் ஆண்டில் அது ரூ.2.15 ஆகக் குறைந்துள்ளது. இந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் அச்சிடப்படுகின்றன.