புதிய கொரோனா XE வைரஸ்; இந்தியாவிற்கு ஆபத்து..? – மத்திய அரசு அவசர ஆலோசனை!
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:15 IST)
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ குறித்த முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
இந்தியாவில் பரவிய டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரொனா வைரஸ்களால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.
இந்நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ வேகமாக பரவத் தொடங்கியது. முன்னதாக மும்பையில் ஒருவருக்கு இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு அதை மறுத்தது.
தற்போது புதிய எக்ஸ்இ வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதில் புதிய வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.