கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிப்பா? மத்திய அரசு விளக்கம்..!

வெள்ளி, 17 மார்ச் 2023 (15:23 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசி காரணமாகத்தான் மாரடைப்பு அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இன்று நடந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை என்பி ராஜு ரஞ்சன் சிங் கொரோனா காலத்திற்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தடுப்பூசி காரணமா? என்ற கேள்வி எழுப்பினார் 
 
இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் கொரோனா காலத்திற்கு பிறகு அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்தவித தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்
 
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்