கொரோனா பரவல்: நாளை மத்திய அமைச்சர் முக்கிய ஆலோசனை!

புதன், 22 ஜூன் 2022 (20:46 IST)
கொரோனா பரவல் காரணமாக நாளை மத்திய அமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்