முடியும் ஊரடங்கு? எகிறும் கொரோனா பாதிப்பு!!

சனி, 30 மே 2020 (09:58 IST)
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 லிருந்து 1,73,763 ஆக உயர்வு.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்காவது கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 லிருந்து 1,73,763 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 லிருந்து 4,971 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106 லிருந்து 82,370 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பில் இருந்து 26,997 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,098 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்