1,08,38,194 ஆக அதிகரித்த கொரோனா - இந்திய பாதிப்பு நிலவரம்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,38,194 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,55,080 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,34,505 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,831 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,904 பேர் குணமடைந்துள்ளதாகவும், 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.