இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மக்கள் பீதி!!

வியாழன், 11 மார்ச் 2021 (10:00 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
ஆனால் கடந்த சில நாட்களாக 20,000-த்திற்கு குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 22,854 பேர் பாதித்துள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,85,561 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் புதிதாக 126 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,189ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,100 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,38,146 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,89,226 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்