தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த தடுப்பூசியானது மே மாதம் முதல் தயாரிப்பு பணிகள் தொடங்கபோவதாக சீரம் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். மே மாதம் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் முடிவடையும். இந்தியாவுக்கும் உலகத்திற்கும் தேவையான அளவு மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.