கொரோனா 3வது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும்

திங்கள், 10 ஜனவரி 2022 (18:36 IST)
கொரோனா 3வது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும் என ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனிந்திர அகர்வால் பேட்டி. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,57,07,727 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா 3வது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும் என ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, நாடு முழுவதும் ஜனவரி மாதம் இறுதியில் கொரோனா பரவல் புதிய உச்சம் பெறும். 2வது அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட இந்த அலையில் பாதிக்கப்படுவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேசமயம் மார்ச் மாதம் மத்தியில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி 3வது அலை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்