தாஜ்மஹாலில் கங்கை நீரை ஊற்றி அபிஷேகம்: இந்து கோவில் என கூறிய இருவர் கைது..!

Siva

ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (09:27 IST)
தாஜ்மஹாலை இந்து கோவில் என்று கூறி கங்கை நீரால் அபிஷேகம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாஜ்மஹாலுக்குள் நேற்று சுற்றுலா பயணிகள் போல் நுழைந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த கங்கை நீரை தாஜ்மஹால் மீது ஊற்றி உள்ளதாகவும் தாஜ்மஹால் இந்து கோவில் என்றும் அதன் புனிதத்தை காப்பதற்காக கங்கை நீரை ஊற்றியதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் அகில பாரத இந்து மகாசபை  என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் மீது மத வழிபாட்டு தலத்தை அவமதித்தல், மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாஜ்மஹால் சிவன் கோயில் என்பதால் கங்கை நீரால் அபிஷேகம் செய்ததாக கைதான இருவரும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் பெண் ஒருவர் தாஜ்மஹாலை கங்கை நீரால் அபிஷேகம் செய்ய முயன்றதாக கூறப்பட்ட நிலையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்