பாஜகவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் உதவுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (15:07 IST)
பாஜகவுக்கு மறைமுகமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உதவுகிறது என திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திரிபுராவில் காங்கிரஸ் மற்றும் மார்க்கெட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் செயல்படுவதாகவும் அவர்களால் காங்கிரஸ் இடதுசாரி கூட்டணிக்கு எந்த ஒரு இடையூறும் அளிக்க முடியாது என்றும் காங்கிரஸ் தலைவர் அஜோய்குமார் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் விளையாட்டை திரிணாமுல் காங்கிரஸ் விளையாடி வருகிறது என்றும் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்க்கும் இடையே மறைமுகமாக தொடர்பு இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறது என்றும் பாஜகவினர் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
60 தொகுதி உள்ள திரிபுரா மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்