தேர்தலில் மேட்ச் பிக்ஸிங்: தெலங்கானாவில் ஆட்சி கலைப்பு பின்னணி என்ன?

வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (16:24 IST)
தெலங்கானாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அம்மாநிலத்தின் முதல்வராக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தலைமையில் சந்திரசேகர ராவ் பதவியேற்றார். 
இவரது பதவி முடிய இன்னும் 9 மாதங்கல் உள்ள நிலையில், முன் கூட்டியே தேர்தலை சந்திக்க சந்திக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். எனவே, சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த தீர்மானத்தை அம்மாரில் ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். தற்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளில் 105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். விரைவில் மீதமுள்ள தொகுதிகளின் வேட்பாளர்களின் அறிவிப்புகள் வெளியாகும். 
 
இந்நிலையில், இது குறித்து தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி பின்வருமாரு பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தும் ஆளும் கட்சியின் தந்திரம் பலிக்காது. 
 
சந்திரசேகர் ராவும், தேர்தல் ஆணையமும் இணைந்து மேட்ச் பிக்ஸிங் செய்துள்ளனர். முன்கூட்டியே தேர்தல் நடத்தும் சந்திரசேகர ராவின் முடிவுக்கு தேர்தல் ஆணையமும் உடன்படுகிறது.
 
இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் சந்திரசேகர் ராவ் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வருகின்றன என விமர்சனம் செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்