மேலும் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மாற்று வேட்பாளர்களை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி என்பவர் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அது மட்டும் இன்றி அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பிற அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது வேட்பமனுவை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் என்பவர் போட்டியின்றி தேர்வானார் என்று அறிவிக்கப்பட்டது.