உத்தரபிரதேச மாநில முதல்வர் தினந்தோறும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அம்மாநில மக்களின் நன்மதிப்பை பெற்று வரும் நிலையில் நேற்றைய அதிரடியாக 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 80% வருகைப்பதிவு கட்டாயம் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு பெரும் ஆதரவும் சிறிய எதிர்ப்பும் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
சரியான வருகைப்பதிவு இல்லாமல் தேர்வு எழுதும் மாணவர்கள் தரமான மாணவர்களாக இருக்க முடியாது என்றும், வருகைப்பதிவில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.