பீகார் மாநிலத்தில் சமீபத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 150 குழந்தைகள் பலியாகினர். இது அம்மாநிலத்தில் மட்டுமல்லாமல் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெறும் லோக்சபாவிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் பலியான குழந்தைகள் அனைவரும் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை கொண்ட வீட்டில் வசித்தவர்கள் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
அதில், பலியான குழந்தைகள் அனைவரும் ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசித்து தெரியவந்தது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதும், மார்ச் மாதம் முதல் நீர்ச்சத்தை சரிசெய்ய வேண்டிய ஓஆர்எஸ் பவுடர் வழங்காதததும் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் வளர்சிதை மாற்றக் கோளாறு சார்ந்த நோய்கள் மற்றும், குழந்தைகள் குறைந்த எடையில் இருந்த காரணத்தினால் குழந்தைகள் இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.