கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா மதிகேரியில் உள்ள சாதனா சமவேஷா என்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். அமைச்சர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே சித்தராமையா அசந்து பல போஸ்களில் தூங்கியுள்ளார். அவர் தூங்கி வழியும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து இணையதளவாசிகள் பலர் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.