விவசாயக் கடன்களுக்கு வட்டி மானியம்: மத்திய அரசு அதிரடி முடிவு

புதன், 17 ஆகஸ்ட் 2022 (19:34 IST)
விவசாய கடன்களுக்கு ஒன்றரை சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது
 
3 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதை அடுத்து அனைத்து கடன்களுக்கும் வட்டி வீதம் அதிகரித்துள்ளது
 
இந்த நிலையில் இந்த வட்டி விகிதம் உயர்வு காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விவசாயிகளுக்கு மட்டும் ஒன்றரை சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்
 
மீனவர்கள் கால்நடை விவசாயிகள் ஆகியோருக்கும் இந்த வட்டி மானியம் பொருந்தும் என்றும் இதற்காக 34 ஆயிரத்து 856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்