கடன் பெற்றோருக்கு போன் செய்யக் கூடாது? – வங்கிகளுக்கு புதிய உத்தரவு!

சனி, 13 ஆகஸ்ட் 2022 (12:08 IST)
வங்கிகளில் கடன் பெற்றோரிடம் கடனை வசூலிக்க வங்கிகள் பின்பற்றும் வழிமுறைகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கியவர்களிடம் கடன் வசூலிக்க போன் மூலம் மிரட்டுவது, ஆள் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்களிடம் கடன் வசூலிப்ப்பது குறித்த விதிமுறையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்களை எந்த விதத்திலும், வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அநாகரிகமான குறுஞ்செய்திகள், எச்சரிக்கை விடுக்கும் தோனியில் தொலைபேசியில் மிரட்டுதல் உள்ளிட்டவை கூடாது. அதுபோல கடனை செலுத்துமாறு இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்